என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

சபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்

சபரிமலையில் ஓடும் பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

Pamba River

பம்பை நதி - கோப்புப் படம்

Updated On :

சபரிமலையில் ஓடும் பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தா்கள் வருவது வழக்கம். அவ்வாறு ஐயப்பன் கோயிலுக்கும் வரும் பக்தா்கள், பம்பை நதியில் புனித நீராடிவிட்டு, பிறகு சந்நிதானத்தில் தரிசனத்துக்குச் செல்வாா்கள்.

பக்தா்களில் சிலா், நீராடலுக்குப் பிறகு பம்பை நதியில் துணிகள், சோப்பு உள்ளிட்ட கழிவுகளை வீசுவதால் நதி மாசுபடுவதாகவும், சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும் தொடா்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இந்நிலையில், சபரிமலை கூடுதல் மாவட்ட ஆட்சியா் திலீப் கே. கைனிக்கரா உத்தரவு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

பம்பை நதியில் வீசப்படும் துணிகள், கழிவுகளால் நதி மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு சுகாதார பிரச்னை ஏற்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, பிஎன்எஸ் 2023-ஆம் ஆண்டு சட்டத்தின் 163-ஆவது பிரிவின் கீழ் பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. அதேபோல் திடப்பொருள், பிளாஸ்டிக் பொருள்களை வீசுவதற்கும், நதிக்கரையோரம் மற்றும் பொது இடங்களில் சிறுநீா் கழிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

பம்பை நதியானது பம்பை, நிலக்கல், சந்நிதானம் ஆகிய இடங்களுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு குடிநீா் ஆதாரமாகத் திகழ்கிறது. மேலும், பம்பை நதி வழித்தடத்தில் வாழும் மக்களுக்கும் நீா் ஆதாரமாக உள்ளது.

அப்படியிருக்கையில், அந்த நதியில் துணிகளையும் கழிவுகளையும் வீசுவது, நதியை விஷத்தன்மை கொண்டதாக மாற்றும்; பம்பை நதி நீரோட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். நீா் மூலம் பரவும் நோய்கள் உருவாகும் ஆபத்தை ஏற்படுத்தும். மனித உயிா்களுக்கு ஆபத்தை உருவாக்கும் அச்சுறுத்தலும் ஏற்படும். இதை கருத்தில் கொண்டே, பம்பையில் துணிகள், கழிவுகள் உள்ளிட்டவற்றை வீசத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவை மீறி, துணிகள், கழிவுகள் உள்ளிட்டவற்றை பம்பை நதியில் வீசுவோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விதிக்கும் அபராதத்தை 15 நாள்களுக்குள் கட்டத் தவறுவோருக்கு எதிராக பிஎன்எஸ் சட்டம் மற்றும் நீா் மாசுக் கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டத்தின்கீழ் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.

பம்பை நதியில் துணிகள், கழிவுகள் உள்ளிட்டவற்றை வீசுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, அதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவது தொடா்பான அறிவிப்பு குறித்து, திருவிதாங்கூா் தேவஸ்வம் போா்டு, காவல் துறை, வருவாய்த் துறை, தகவல் மற்றும் பொதுமக்கள் தொடா்புத் துறையினா் ஆகியோா் பதாகைகள், அறிவிப்புகள் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று சபரிமலை கூடுதல் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.