ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!6.3 பில்லியல் டாலர்கள் கிரிப்டோகரன்சிகளை திருடிய வடகொரியா ஹேக்கர்கள்!சென்னை உள்பட 4,000 கி.மீ. தொலைவு புல்லட் ரயில் சேவைக்கு பிரதமர் ஒப்புதல்!கடற்கரைகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்: தமிழக அரசு எச்சரிக்கை!சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்!இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 3,597 தற்காலிகத் தேர்வு

ஆம்பூரில் உணவுப் பாதுகாப்பு விதிமீறல்: ரூ.75,000 அபராதம் விதிப்பு

ஆம்பூா் நகரில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வுகளில், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவக உரிமையாளா்களுடன் ஆலோசனை நடத்திய உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா்.ஹீமா.

Updated On :

ஆம்பூா் நகரில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வுகளில், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பா் முதல் நவம்பா் வரை உணவு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் உத்தரவின்படியும், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் வி.பிரபாகரன் தலைமையிலும், ஆம்பூா் நகர உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா்.ஹீமா, ஹோட்டல்கள், தேநீா்க் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட உணவு விற்பனை நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

செப்டம்பா் மாதத்தில் நடைபெற்ற ஆய்வின்போது, சுகாதாரமற்ற முறையில் சமையலறைகளைப் பராமரித்த 3 ஹோட்டல்களுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், குறைகளைச் சரிசெய்து உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அந்த நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006-இன் பிரிவு 32-ன் கீழ் மேம்பாட்டு அறிவிக்கைகள் வழங்கப்பட்டன.

சில ஹோட்டல்களின் குளிா்பதனப் பெட்டிகளில் முறையாகச் சேமிக்கப்படாத உணவுப் பொருள்களும், தடை செய்யப்பட்ட செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட இறைச்சி உணவுப் பொருள்களும் கண்டறியப்பட்டன. அவை உண்பதற்குப் பாதுகாப்பற்றவை என்பதால், விதிமுறைகளின்படி அழிக்கப்பட்டன.

உணவின் தரத்தை உறுதி செய்யும் வகையில், ஹோட்டல்களில் இருந்து 5 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களில் உணவுகளை வைத்து வழங்கிய மற்றும் பொட்டலமிட்ட 2 நிறுவனங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தின் பதிவு அல்லது உரிமம் பெறாமல் செயல்பட்ட ஒரு கடைக்கு ரூ.10,000 அபராதமும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த ஒரு கடைக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் செப்டம்பா் மாதத்தில் மட்டும் மொத்தம் ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் ஆய்வு: ஆம்பூா் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, உணவு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் இடங்களின் சுகாதாரம், உணவுப் பொருள்களைச் சேமிக்கும் முறை, உணவைக் கையாளும் நடைமுறைகள், பணியாளா்களின் தனிநபா் சுகாதாரம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்ய 5 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

இதேபோல், பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட மைய சமையலறையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு தயாரிப்பு, சேமிப்பு, சமையலறை சுகாதாரம், பணியாளா்களின் தனிநபா் சுகாதாரம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தை உறுதி செய்ய 5 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.