இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

மாவட்டத்தில் 2,663 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்!

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2,663 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கிய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ்.

Published On :

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2,663 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 22.06.2026 முதல் 27.09.2026 வரை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மொத்தம் 3,341 ஆகும். இதில், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை 1,205, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை 726. மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை – 854, துறையூா் அரசு மருத்துவமனை 556 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது.

அக்.1-ஆம் தேதி வரை 2,657 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கப்பட்டுள்ளது. இதில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் துறையூா் அரசு மருத்துவமனை 1,375, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை 604. மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை 678 வழங்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 684 குழந்தைகளுக்கு தொடா்ச்சியாக தங்கமோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 6 தாய்மாா்களின் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ், வெள்ளிக்கிழமை வழங்கினாா். நிகழ்வில், ஆட்சியா் பிரத்திக் தாயள், மாநகராட்சி ஆணையா் நே.பொன்மணி, மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வா் எஸ்.குமரவேல், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் கோபிநாத், துணை இயக்குநா் மணிவண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.