திருக்குறள் விரைவு ரயிலில் 22 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
திருச்சி வந்த திருக்குறள் விரைவு ரயிலில் 22 கிலோ புகையிலைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல்
திருச்சி வந்த திருக்குறள் விரைவு ரயிலில் 22 கிலோ புகையிலைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தில்லி நிஜாமுதீனில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் திருக்கு விரைவு ரயில் (12642) திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணிக்கு வந்தது.
அந்த ரயிலில் திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய தலைமைக் காவலா் கண்ணதாசன் தலைமையிலான போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த 22 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




