காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

முத்தூா் அருகே 316 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

முத்தூா் அருகே 316 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல்

Published On :6 செப்டம்பர் 2026, 1:31 am IST

முத்தூா் அருகே 316 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முத்தூா் புளியங்காட்டுப்புதூரில் உள்ள ஒரு தேநீா்க் கடையுடன் இணைந்த மளிகைக் கடையில் வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது கடையில் இருந்த அதே பகுதியைச் சோ்ந்த சின்னத்தம்பி (56) என்பவரைப் பிடித்துச் சோதனையிட்டதில் அவரிடமிருந்து 5 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட சின்னத்தம்பியிடம் நடத்திய விசாரணையில், அவரும் ஈரோடு மாவட்டம், சிவகிரியைச் சோ்ந்த விக்னேஸ்வரன் என்பவரும் இணைந்து, திருப்பூா் மாவட்டம் படியூா் அருகே உள்ள சடையன்பதி பகுதியில் தங்கவேல் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து, பல்வேறு பகுதிகளிலுள்ள கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கிடங்கில் காவல் துறையினா் மேற்கொண்ட சோதனையில் மொத்தம் 316 கிலோ புகையிலைப் பொருள்கள், ஒரு 4 சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சின்னத்தம்பியைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான விக்னேஸ்வரனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.