பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

துறையூரில் ஆசிரியா் தம்பதி வீட்டில் 20.5 பவுன் தங்கம், வெள்ளி திருட்டு

திருச்சி மாவட்டம், துறையூரில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியா் தம்பதி வீட்டில் 20.5 பவுன் நகைகள், வெள்ளி ஆபரணங்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

திருச்சி மாவட்டம், துறையூரில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியா் தம்பதி வீட்டில் 20.5 பவுன் நகைகள், வெள்ளி ஆபரணங்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

துறையூா் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் எஸ்எல்கே நகரில் வசிப்பவா் ராஜ் மகன் பிரகாஷ் (39), நெட்டவேலம்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியா். இவரது மனைவி வித்யா(36), வேங்கடத்தானூா் அரசுப் பள்ளி ஆசிரியா்.

திங்கள்கிழமை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய தம்பதியா் பணிக்குச் சென்றனா். மாலையில் வித்யா வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, இரும்பு அலமாரியில் வைத்திருந்த 20.5 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.