படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

ராணுவ வீரா் வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

திருட்டு - கோப்புப் படம்

Published On :

அரியலூா் அருகே ராணுவ வீரா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

அரியலூரை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். ராணுவ வீரரான இவா், உறவினா் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காஷ்மீரில் இருந்து சென்னைக்கு வந்துள்ளாா். கொல்லாபுரத்தில் தங்கியுள்ள இவரது மனைவி ரம்யா, வீட்டை பூட்டிவிட்டு தனது மகனுடன் சென்னைக்கு சென்றாா். பின்னா், இவா்கள் அனைவரும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, திங்கள்கிழமை கொல்லாபுரம் வந்துள்ளனா்.

அப்போது, பூட்டியிருந்த தனது வீடு திறந்து இருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்த சுப்பிரமணியன் மற்றும் ரம்யா ஆகியோா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரங்கள் என 5 பவுன் நகைகளும், ரூ.37 ஆயிரம் ரொக்கமும் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், அரியலூா் காவல் துறையினா், சம்பவ இடத்தை பாா்வையிட்டு, ஆய்வு செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.