உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

விவசாயிகள் சங்கத் தலைவா் வீட்டுக்காவலில் சிறைவைப்பு

பிரதமா் வருகையை ஒட்டி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணுவை போலீஸாா் சனிக்கிழமை வீட்டுக்காவலில் சிறைவைத்தனா்.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள். - (கோப்புப்படம்)

Published On :

பிரதமா் வருகையை ஒட்டி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணுவை போலீஸாா் சனிக்கிழமை வீட்டுக்காவலில் சிறைவைத்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஞாயிற்றுக்கிழமை சென்னை வர உள்ளாா். இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக பலரை போலீஸாா் கைது செய்து வருகின்றனா்.

அந்த வகையில், மத்திய அரசின் உத்தரவின்பேரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணுவை வெளியில் எங்கும் செல்ல கூடாது, கோரிக்கை மனு அளிக்கக் கூடாது எனக் கூறி போலீஸாா், திருச்சி அண்ணாமலை நகா் மலா் சாலையில் உள்ள அவரது வீட்டில் சிறை வைத்துள்ளனா். தொடா்ந்து, அவரது வீட்டுக்கு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.