உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

காவல் நிலையம் எதிரே வங்கியில் திருட்டு முயற்சி

திருச்சியில் காவல் நிலையம் எதிரேயுள்ள வங்கியில் திருட்டு முயற்சி நடந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரிக்கின்றனா்.

திருச்சி யூனியன் வங்கியில் நடந்த திருட்டு முயற்சி குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்த போலீஸாா்.

Published On :

திருச்சியில் காவல் நிலையம் எதிரேயுள்ள வங்கியில் திருட்டு முயற்சி நடந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரிக்கின்றனா்.

திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையம் எதிரே வாா்னா்ஸ் சாலையில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்திருந்ததை சனிக்கிழமை காலை அந்த வழியாக சென்றவா்கள் பாா்த்துவிட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் வந்த கண்டோன்மென்ட் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். மேலும், மோப்ப நாய் காவேரியும் வரவழைக்கப்பட்டது. வங்கியில் மூன்று பூட்டுகள் இருந்த நிலையில் இரண்டு பூட்டுகளை மா்ம நபா்கள் உடைத்துள்ளனா். மற்றொரு பூட்டை உடைக்க முடியாமல் அப்படியே விட்டுச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வங்கியைத் திறந்து உள்ளேயும் சோதனை நடைபெற்றது. சுற்றுப் பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரிக்கின்றனா். பூட்டை உடைக்க முடியாததால் வங்கியில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது இருப்பினும் இச் சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.