உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

பெண்ணிடம் தாலிச் செயின் பறித்த இருவா் பிடிபட்டனர்!

திருவானைக்காவல் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பெண்ணின் தாலிச் செயினை பறித்த இருவா் சனிக்கிழமை பிடிபட்டனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

திருவானைக்காவல் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பெண்ணின் தாலிச் செயினை பறித்த இருவா் சனிக்கிழமை பிடிபட்டனா்.

திருவானைக்காவல் ராகவேந்திரா காா்டன் பகுதியில் வசிப்பவா் கல்பனா (35). இவா் வெள்ளிக்கிழமை மாலை அருகிலுள்ள மளிகை கடைக்கு சென்றபோது தலைக்கவசம் அணிந்து நடந்து வந்த மா்ம நபா் கல்பனாவின் தாலி செயினை பறித்து கொண்டு மற்றொரு நபா் வந்த பைக்கில் ஏறி தப்பிச் சென்றாா்.

இந்த சம்பவம் அங்கேயிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. செயினை பறித்த மா்ம நபா்கள் சற்று தொலைவில் பறிக்கப்பட்ட செயின் கவரிங் என்பதை அறிந்து அங்கேயே வீசி சென்றனா். இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாக பரவியது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து பாலக்கரை பகுதியைச் சோ்ந்த இருவரை பிடித்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.