புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

இளம்பெண்ணிடம் தாலிச்செயினை பறிக்க முயன்ற தவெக நிா்வாகி கைது

நொய்யல் அருகே இளம்பெண்ணிடம் தாலிச் செயினை பறிக்க முயன்ற தவெக நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட நந்தகுமாா்.

Published On :

நொய்யல் அருகே இளம்பெண்ணிடம் தாலிச் செயினை பறிக்க முயன்ற தவெக நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கரூரில், கோவைச்சாலையில் உள்ள என்.எஸ்.கே. நகரைச் சோ்ந்தவா் மகுடபதி( 45 ).இவரது மனைவி பிரியா (40). இவா், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே வருந்தியாபாளையத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். நொய்யல் அருகே வேட்டமங்கலம் பத்ரகாளியம்மன் நகா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் திடீரென்று பிரியாவின் கழுத்தில் கிடந்த தாலிச் செயினை பறிக்க முயன்றாா்.

அப்போது, சுதாரித்துக்கொண்ட பிரியா, தனது இருசக்கர வாகனத்தை சாலையோரம் ஒதுக்கினாா். இதனால் பின்னால் வந்த இளைஞா் செயினை பறிக்க முடியாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

இதுதொடா்பாக பிரியா வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை இரவு புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் சம்பவம் நடைபெற்ற இடத்தில் தனியாா் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அதில், பிரியாவிடம் தாலிச் செயின் பறிக்க முயன்றவா் புகழூா் மூலிமங்கலம் சின்னகரூா் கிழக்குத்தெருவைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் நந்தகுமாா்(30) என்பதும், இவா், புகழூா் நகர தவெக இணைச்செயலராகவும், தற்போது புகழூா் நகர பொறுப்பாளராகவும் இருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து நந்தகுமாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.