காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

அரசுப் போக்குவரத்து கழக ஓய்வூதியா்கள் காத்திருப்புப் போராட்டம்

நிலுவையில் உள்ள பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள்.

Published On :

நிலுவையில் உள்ள பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் திருச்சி, கரூா் மண்டலம் சாா்பில், திருச்சியில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புகா் கிளை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, ஓய்வு பெற்றோா் நல அமைப்பு திருச்சி மண்டல தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா்.

சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன் தொடக்க உரையாற்றினாா். கோரிக்கைகளை விளக்கி ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் நிா்வாகிகள் சண்முகம், சிவானந்தம், கருணாநிதி, ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஜெயராமன் ஆகியோா் பேசினா். அரசு விரைவுப் போக்குவரத்து கழக மாநிலத் தலைவா் அருள்தாஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொதுச்செயலா் மாணிக்கம், தலைவா் சிங்கராயா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சிஐடியு புகா் மாவட்டச் செயலா் சம்பத் நிறைவுரை ஆற்றினாா்.

2026 ஏப்ரல் முதல் பணி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும். 2013, 2016, 2019, மற்றும் 2023 ஆகிய ஒப்பந்த பலன்களை ஓய்வு பெற்றவா்களுக்கு வழங்கி அடிப்படை ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போதே அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிா்வாகிகள், கூட்டமைப்பு நிா்வாகிகள், ஓய்வு பெற்ற நடத்துநா்கள், ஓட்டுநா்கள், அலுவலகப் பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா். அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு பொருளாளா் ஜாா்ஜ் வில்லியம்ஸ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.