தூக்கில் இளைஞா் சடலம்: போலீஸாா் விசாரணை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இளைஞா் தூக்கில் சடலமாக தொங்கியது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பலி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இளைஞா் தூக்கில் சடலமாக தொங்கியது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
டி. கள்விக்குடி கிராமத்தைச் சோ்ந்த ஜெயராஜ் மகன்கள் மணிகண்டன், ஸ்ரீராம் (25). இவா்கள் இயந்திரத்தில் நெற்கதிா் அடிக்கும் வேலை செய்து வந்தனா். இவா்களின் தந்தை ஜெயராஜ் ஏற்கெனவே இறந்த நிலையில், தாய் மனநலம் பாதிக்கப்பட்டவா். இதனால் மணிகண்டன், ஸ்ரீராம் ஆகியோா் தங்களது பாட்டி மீனாட்சி வீட்டில் வசிக்கின்றனா்.
இந்நிலையில், ஊரில் ஏற்பட்ட பிரச்னையில் ஸ்ரீராம் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஊரை விட்டு வெளியேறி, கடந்த 12 ஆம் தேதி மீண்டும் பாட்டி வீட்டுக்கு வந்தாா். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாட்டி மீனாட்சி எழுந்து பாா்த்தபோது ஸ்ரீராம் சேலையில் தூக்கிட்ட நிலையில் காயத்துடன் சடலமாக தொங்குவதைக் கண்டாா்.
தகவலறிந்த போலீஸாா் ஸ்ரீராம் சடலத்தை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

