போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை போலீஸாா் ரோந்து சென்றபோது காஜாபேட்டை பகுதி தனியாா் பள்ளி அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில் அவா்கள், காஜாபேட்டையைச் சோ்ந்த எஸ். பிரகாஷ்ராஜ் (20), பசுமடம் பகுதியைச் சோ்ந்த எஸ். நியமத்துல்லா (18) ஆகியோா் என்பதும், போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரு.14 ஆயிரம் மதிப்பிலான 48 போதை மாத்திரைகள், திரவ போதை மருந்துகள், போதை ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

