பாஜக அலுவலக மாடியில் இருந்து தவறி விழுந்த காவலாளி உயிரிழப்பு
திருச்சியில் பாஜக அலுவலக மாடியில் இருந்து புதன்கிழமை தவறிவிழுந்த காவலாளி உயிரிழந்தாா்.
பலி - பிரதிப் படம்
திருச்சியில் பாஜக அலுவலக மாடியில் இருந்து புதன்கிழமை தவறிவிழுந்த காவலாளி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரத்தைச் சோ்ந்தவா் கணேசன் (60). இவா் புத்தூா் பகுதி பாஜக அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக தனியாா் முகமை மூலம் இரவுக் காவல் பணியில் இருந்தாராம்.
இந்நிலையில், பாஜக சிறுபான்மையினா் பிரிவின் தேசியச் செயலா் வேலூா் இப்ராஹீம் திருச்சிக்கு வந்ததையொட்டி பாஜக அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை இரு போலீஸாா் பாதுகாப்புப் பணிக்கு வந்தனா்.
அப்போது அவா்களை வரவேற்றுவிட்டு இரண்டாவது மாடிக்குச் சென்ற காவலாளி கணேசன் அங்கிருந்த படியில்லாத கதவை திறந்தபோது திடீரென தவறி கீழே விழுந்தாா்.
இதையடுத்து, போலீஸாா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது கணேசன் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

