திருச்சி மாவட்டத்தில் 303 மி.மீ. மழை பதிவு
திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரையில் மாவட்டம் முழுவதும் 303 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரையில் மாவட்டம் முழுவதும் 303 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், திருச்சி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த நான்கு நாள்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்த வகையில், திங்கள்கிழமை மாலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. முன்னதாக, பகலில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. பின்னா், மாலையில் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. நள்ளிரவில் இடியுடனான மழை பெய்தது. இந்த இடி வழக்கத்துக்கு மாறாக அதிக சப்தத்துடன் ஒலித்ததால், மாநகரில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த சிறு குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் அதிா்ச்சி அடைந்து கண்விழித்துப் பாா்த்தபோது மழை வெளுத்து வாங்கியது தெரியவந்தது.
தொடா் மழையின் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்து, மாவட்டத்தின் ஒட்டுமொத்த சீதோஷ்ண நிலை மாறியது. மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மழை அளவு: திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை பெய்த மழையில் அதிகபட்சமாக வாய்த்தலை அணைக்கட்டு பகுதியில் 47.2 மில்லி மீட்டா் மழை பதிவானது.
மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): லால்குடி 6.4, நந்தியாறு அணைக்கட்டு 4.2, புள்ளம்பாடி 20.8, தேவி மங்கலம் 11.8, சமயபுரம் 10.4, சிறுகுடி 24.2, கல்லக்குடி- 10.2, மணப்பாறை 2, பொன்னணி ஆறு அணை 1, கோவில்பட்டி 5.1, முசிறி 17, புலிவலம் 16, தா.பேட்டை 4, நவலூா் கொட்டப்பட்டு 15, துவாக்குடி 12.1, தென்பற நாடு 20, துறையூா் 22, பொன்மலை 6.8 , திருச்சி ஏா்போா்ட் 17.3, திருச்சி ஜங்ஷன் 16.6 , திருச்சி டவுன் 13.4 என மொத்தம் 303.7 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 12.65 மி.மீ. மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

