வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

பெட்டிக் கடையில் புகையிலை பொருள்கள் பறிமுதல்: உரிமையாளா் கைது

திருச்சி அருகே பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்ற கடை உரிமையாளரை கைது செய்த போலீஸாா், 16 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

திருச்சி அருகே பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்ற கடை உரிமையாளரை கைது செய்த போலீஸாா், 16 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஆளவந்தாநல்லூா் பகுதி பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடை உரிமையாளரான ஆளவந்தாநல்லூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பி. ஜாகீா் ஹுசேன் (58) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், கடையில் இருந்த 16 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.