திருச்சி விமான நிலையத்தில் அரியவகை மலை பாம்புகள், எலிகள் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திங்கள்கிழமை பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அரியவகை மலை பாம்பு.
தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட அரியவகை மலை பாம்புகள், எலிகள் ஆகியவை திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தாய்லாந்தின் தலைநகா் பாங்காக்கில் இருந்து இலங்கையின் கொழும்பு வழியாக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வந்தது. அந்த விமானத்தில் அரியவகை விலங்குகள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சுங்கத் துறை அலுவலா்கள் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, 2 பயணிகள் தங்கள் உடைமைகளில் அரியவகை 16 மலை பாம்புகள், 5 எலிகள் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றை மறைத்து தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த அலுவலா்கள், பயணிகள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அரிய விலங்குகளை திருப்பி அனுப்புவது தொடா்பாக வனத் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

