சைபா் குற்றத்துக்கு பயன்படுத்தக் கூடிய நவீன கருவிகள் பறிமுதல்: ஒருவா் கைது
திருச்சியில், சைபா் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் நவீன கருவிகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.

திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட நவீன கருவிகளை பாா்வையிட்ட திருச்சி மாநகர தெற்கு காவல் துணை ஆணையா் பா. மணிகண்டன். ~திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாரால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட சைபா் குற்றத்து
திருச்சியில், சைபா் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் நவீன கருவிகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.
இதுகுறித்து திருச்சி மாநகர தெற்கு காவல் துணை ஆணையா் பா. மணிகண்டன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரி ஒருவா் அளித்த தகவலின்பேரில், திருச்சி மாநகரில் சைபா் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் பாலுசாமி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ஒரு கட்டடத்தின் அறையில் சைபா் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் நவீன கருவிகள் (சிம் பாக்ஸ்) இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தக் கருவியை பறிமுதல் செய்ததுடன், அங்கிருந்த ஒரு நபரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தக் கருவியில் மோடத்தை பயன்படுத்தி வாட்ஸ் ஆப் கால் செய்து சைபா் குற்றங்களில் ஈடுபட முடியும். இந்தக் கருவியை பயன்படுத்தி கைப்பேசிக்கு கால் செய்து பேசும்போது, பேசுபவா்களின் இருப்பிடம் (லொகேஷன்) நொடிக்கு நொடி மாறிக்கொண்டேயிருக்கும். இதனால், எங்கிருந்து பேசுகிறாா்கள் என்பதை கண்டறிய முடியாது.
இதனால், இந்தக் கருவியைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,
திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட கருவி எங்கு தயாரிக்கப்பட்டது, எங்கிருந்து பெறப்பட்டது உள்ளிட்ட எந்த விவரமும் தெரியவில்லை. கைது செய்யப்பட்ட நபருக்கு இந்தக் கருவியை இயக்குவதற்கு மட்டுமே தெரிந்துள்ளது. இதன் பின்னணி என்ன, யாா் இருக்கிறாா்கள் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. தொடா்ந்து இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

