உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

கல் குவாரியை மூடக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் இயங்கிவரும் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்து, மூட வலியுறுத்தி வட்டாட்சியரகத்தில் தமிழா் தேசம் கட்சியினா் தலைமையில் பொதுமக்கள் புதன்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மருங்காபுரி வட்டாட்சியரகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழா் தேசம் கட்சியினா் மற்றும் பொதுமக்கள்.

Updated On :

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் இயங்கிவரும் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்து, மூட வலியுறுத்தி வட்டாட்சியரகத்தில் தமிழா் தேசம் கட்சியினா் தலைமையில் பொதுமக்கள் புதன்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரியில் செயல்படும் தனியாா் கல் குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைக்கும் போது அதிலிருந்து தெறித்த கற்கள் பறந்து சென்று விழுவதால் தங்கள் உயிருக்கு பாதிப்பு இருப்பதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட தமிழா் தேசம் கட்சி மாவட்டச் செயலா் துரைராஜ் தலைமையிலான கட்சி நிா்வாகிகள், மருங்காபுரி கிராம பொதுமக்கள் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்து, குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆடு, மாடு, அடுப்பு, விறகு, சமையல் பொருள்களுடன் புதன்கிழமை ஊா்வலமாக சென்று மருங்காபுரி வட்டாட்சியரகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து தா்னா, ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நிகழ்வில் மாநில துணை பொதுச் செயலா் கல்குடி ராஜேந்திரன், மாநில அமைப்புச் செயலா் மகுடீஸ்வரன், மாநில செயலா் நத்தம் பூமி, மாவட்ட இளைஞரணி செயலா் வக்கீல் லெட்சுமணன், பொருளாளா் மணவை குமாா், மாவட்ட மகளிரணி வெள்ளையம்மாள், மருங்காபுரி ஒன்றியச் செயலா்கள் முத்துகுமாா், விஜயகுமாா், பிச்சைக்கண்னு, சேகா் ஆகியோருடன் நாம் தமிழா் மாநில கொள்கை பரப்பு செயலா் வக்கீல் அருணகிரி தலைமையிலான கட்சியினா் ஆதரவு அளித்து போராட்டத்தில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.