ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினா் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் புதுச்சேரி சாலைகளில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி காமராஜா் சிலை அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Published On :

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் புதுச்சேரி சாலைகளில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

வாக்காளா் பட்டியல் திருத்தப்பணிகளில் ( எஸ்ஐஆா்) முறைகேடு இருப்பதாகக் கூறி இண்டி கூட்டணி கட்சிகளின் சாா்பில் புதுதில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினா் காமராஜா் சிலை சதுக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இதனால், புதுச்சேரி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பியுமான வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா். பின்னா் போலீஸாா் அறிவுரையை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.