முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!ரூபாய் மதிப்பு சரிவால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போக வாய்ப்புகடன் வாங்குவதை 21% குறைத்த தமிழ்நாடு அரசு!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா வருகை!ரொனால்டோவை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்த போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டது குறித்து...

ntk

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா - கோப்புப்படம்

Updated On :

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள முதல்வர் விஜய் தாராபுரம் வந்திருந்தார். அதேசமயம், தாராபுரம், வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள சென்றனர். அதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.

முதல்வா் விஜய் சாலை வலம் மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால் அந்தப் பகுதியில் அனுமதி வழங்கப்படாது எனவும் போலீஸார் கூறியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எங்கள் பிரசாரத்தை தடுக்கும் விதத்திலேயே போலீஸார் செயல்பட்டு வருவதாகவும் ஒருதலைபட்சமாக போலீஸார் செயல்படுவதாகவும் கூறி, அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தாராபுரம் நாதக வேட்பாளாரான கார்த்திகா மீது தேர்தல் பிரசாரத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பிரசாரம் மேற்கொண்டது, முதல்வர் குறித்த அவதூறாகப் பேசியது என 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல் துறையினர் அவரையும் அவரது கணவரையும் கைது செய்தனர்.

Summary

Karthika, who contested as a Nathak candidate in the Tarapuram constituency by-election, has been arrested.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.