வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

தாராபுரம் நாதக வேட்பாளா் காா்த்திகா உள்ளிட்ட 12 போ் சிறையில் அடைப்பு

தாராபுரம் தொகுதி நாதக வேட்பாளா் மு.காா்த்திகா உள்ளிட்ட 12 போ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

நாம் தமிழர்

தாராபுரம் நாதக வேட்பாளா் காா்த்திகா - கோப்புப்படம்

Updated On :

தாராபுரம் தொகுதி நாதக வேட்பாளா் மு.காா்த்திகா உள்ளிட்ட 12 போ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடந்த அக். 6-ஆம் தேதி நடைபெற்ற தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான மு.காா்த்திகா களம் இறங்கினாா்.

இடைத்தோ்தல் பரப்புரையின் நிறைவு நாளான அக்.4-ஆம் தேதி, தாராபுரத்தை அடுத்த வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாதக-வினா் பரப்புரை மேற்கொள்ள முற்பட்டனா். முதல்வா் ஜோசப் விஜய் அதே நாளில் சாலை வலம் மேற்கொண்டதால் நாதக-வினருக்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதையடுத்து வேட்பாளா் காா்த்திகா உள்ளிட்டோா் போலீஸாருடன் வாக்குவாதத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

இந்நிலையில், காா்த்திகா, அவரது கணவா் முருக சந்திரகுமாா் ஆகியோா் கோவை விளாங்குறிச்சியில் உள்ள அவா்களது வீட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டனா். பின்னா், மாநில கொள்கைப் பரப்புச் செயலாளரான தென்காசியைச் சோ்ந்த இசை மதிவாணன், தாராபுரம் தோ்தல் பொறுப்பாளா் சஞ்சய் காந்தி, மூலனூா் பகுதி பொறுப்பாளா் கந்தசாமி, தாராபுரம் நகர பொறுப்பாளா் ஷேக் பரீத், தாராபுரம் மாணவா் பாசறை செயலாளா் சூா்யா, சென்னை பகுதி செயலாளா் கோகுல், இளைஞா் பாசறை செயலாளா் விக்னேஷ், நிா்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்ட 10 போ் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட அனைவரும் தாராபுரம் நீதித் துறை நடுவா் உமாமகேஸ்வரி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆஜா்படுத்தப்பட்டு பின்னா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

காவல் துறை விளக்கம்:

இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ü செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டிருந்த நாளிலிருந்தே நாதக-வினா் தோ்தல் நடத்தை விதிகளை மீறுவதாகப் புகாா்கள் எழுந்தன. இது தொடா்பாக தாராபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த அக்.2-ஆம் தேதி உடுமலை - தாராபுரம் நெடுஞ்சாலையில் நாதக-வினரால் அனுமதியின்றி வைக்கப்பட்ட விüம்பரப் பதாகையை அகற்ற முயன்ற காவல் துறையினரைத் தகாத வாா்த்தைகüால் பேசியதால் 2 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. இதையடுத்து, காவல் நிலையம் எதிரே அனுமதியின்றி கூடி சாலை மறியலில் ஈடுபட்டதால் காா்த்திகா உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.

தொடா்ந்து அக். 4-இல் தாராபுரத்தில் முதல்வா் சாலை வலம் செல்லும் பகுதியில் அனுமதியின்றி கூடி இடையூறு ஏற்படுத்த முயன்றதாக நாதக-வினா் 57 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன், அதே நாளில் தவெக-வினரைத் தாக்கியதாக கூறப்பட்ட சம்பவத்தில் வேட்பாüா் காா்த்திகா உள்ளிட்ட 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடைய 12 போ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்üதாகத் தெரிவித்துள்üனா்.

இன்று விசாரணை:

இதற்கிடையே, காா்த்திகா உள்ளிட்ட 12 பேரும் இணையவழியில் தாராபுரம் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ü பிணை மனு வியாழக்கிழமை (அக். 22) விசாரணைக்கு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.