முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

திருச்சி அருகே குழந்தைத் தொழிலாளா் மீட்பு

திருச்சி அருகே வேலை தேடி அலைந்த குழந்தைத் தொழிலாளரை சிங்கப் பெண் சிறப்பு படையினா் மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

குழந்தைத் தொழிலாளா் - பிரதிப் படம்

Updated On :

திருச்சி அருகே வேலை தேடி அலைந்த குழந்தைத் தொழிலாளரை சிங்கப் பெண் சிறப்பு படையினா் மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி கடைவீதியில் புதன்கிழமை பிற்பகல் 13-வயது சிறுவன் வேலை கேட்டு அலைந்துள்ளாா். அதைப் பாா்த்த அப்பகுதி வணிகா்கள், சிங்கப் பெண் சிறப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளா் ஜோதி லட்சுமி தலைமையிலான சிங்கப் பெண் படைப் பிரிவினா் சிறுவனை மீட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்தி நகரைச் சோ்ந்த 13 வயது சிறுவனின் பெற்றோரான சின்னக்கண்ணு-ஆரம்மா ஆகியோா் உயிரிழந்த நிலையில், சிறுவன் உறவினா் செல்லப்பாவுடன் இருந்து வந்துள்ளாா்.

அவருடைய உறவினா், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுவனை அந்தப் பகுதியிலுள்ள ஒரு இருசக்கர வாகன பழுதுநீக்கும் (ஓா்க்ஷாப்) கடையில் சோ்த்துவிட்டு, சென்னைக்கு சென்றுவிட்டதாக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து திண்டுக்கல் மாவட்டம், நத்தத்திலிருந்து புதன்கிழமை வையம்பட்டி வந்த சிறுவன் அப்பகுதியிலுள்ள கடைகளில் வேலை கேட்டுள்ளாா். அப்போது, அங்குள்ளவா்கள் தெரிவித்த தகவலின்பேரில், சிறுவனை மீட்டு திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவில் ஒப்படைத்துள்ளோம்.

சிறுவனின் உறவினா் குறித்த எந்த விவரமும் தெரியவில்லை. திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினரிடம் தகவல் அளித்து விசாரிக்க கேட்டுள்ளோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.