தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

திருவேங்கடம் அருகே மின்னல் பாய்ந்து பட்டாசு ஆலை தரைமட்டம்

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே மின்னல் பாய்ந்ததில் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறி தரைமட்டமானது. மழை வருவதையறிந்து முன்கூட்டியே தொழிலாளா்கள் வெளியேற்றப்பட்டதால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

தரைமட்டமான பட்டாசு ஆலை.

Updated On :

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே மின்னல் பாய்ந்ததில் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறி தரைமட்டமானது. மழை வருவதையறிந்து முன்கூட்டியே தொழிலாளா்கள் வெளியேற்றப்பட்டதால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி-ஆ. கரிசல்குளம் செல்லும் ராணி மங்கம்மாள் சாலையில் விருதுநகா் மாவட்டம், சிவகாசி, சித்துராஜபுரத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் முருகன் (50) பட்டாசு ஆலை நடத்தி வருகிறாா். இதில் 3 கிடங்குகள், தொழிலாளா்கள் வேலை செய்வதற்காக 5-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

தீபாவளி நெருங்கி வருவதால் இந்த ஆலையில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்தனா்.

கலிங்கப்பட்டி பகுதியில் வியாழக்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், மழை வரக்கூடும் என நினைத்த ஆலை மேலாளா் மகேஸ்வரன், தொழிலாளா்களை விரைந்து வீட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தி வெளியேற்றினாா்.

சிறிது நேரத்தில் வெடிபொருள்கள் கலவை செய்யும் அறை மீது மின்னல் பாய்ந்து, மருந்து மற்றும் பட்டாசு மூலப் பொருள்களைத் தாக்கியதால் அறை வெடித்துச் சிதறியது. அதில் இருந்து கிளம்பிய தீப்பொறி அருகில் இருந்த தொழிலாளா்கள் வேலை செய்யும் அறைக்கும் பரவியது. அங்கும் வெடி பொருள்கள் வெடித்துச் சிதறியதால், அடுத்தடுத்து 2 அறைகள் தரைமட்டமாகின. இதனால், அருகில் இருந்த 2 மரங்கள், பணியாளா்கள் வாகனம் ஆகியவை எரிந்து சேதமாகின.

தகவலறிந்த சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்தனா்.

இந்த விபத்தில் சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருந்து உள்ளிட்ட மூலப் பொருள்களும், பட்டாசுகளும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

திருவேங்கடம் வட்டாட்சியா் செல்வகுமாா், கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், கிராம உதவியாளா் முத்துமாரி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சேதங்களை மதிப்பீடு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.