மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

7 கூட்டுறவு அங்காடிகளில் ரூ. 200-க்கு 10 மளிகைப் பொருள்கள்!

திருச்சி மாவட்டத்தில் 7 கூட்டுறவு அங்காடிகளில் 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சியில் உள்ள கூட்டுறவு அங்காடியில் மளிகை பொருள்களை பொட்டலமிடும் பணியில் ஈடுபட்ட அங்காடிப் பணியாளா்கள்.

Updated On :

திருச்சி மாவட்டத்தில் 7 கூட்டுறவு அங்காடிகளில் 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இத்திட்டத்தை துறையூரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவா் மு. ரவிசங்கா் தொடங்கிவைத்தாா். இதேபோல பெல் வளாகத்தில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் திருவெறும்பூா் எம்எல்ஏ நவல்பட்டு எஸ். விஜி தொடங்கிவைத்தாா்.

நிகழ்வுகளில் திருச்சி மண்டல இணைப்பதிவாளா் ஜெயராமன், அமராவதி மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண்மை இயக்குநா் தனலட்சுமி, திருச்சி சரக துணைப்பதிவாளா் முத்துச் செல்வி, முசிறி சாா் துணைப்பதிவாளா் குமாா், பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளா் மாரிச்சாமி, செயலாட்சியா் அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.