விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

8 மாவட்ட கல்லூரிகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி: ஜமால் முகமது அணி சாம்பியன்

திருச்சியில் நடைபெற்ற 8 மாவட்ட கல்லூரிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

டேபிள் டென்னிஸ் போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியினா். உடன் சிறப்பு விருந்தினா்கள்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:23 am IST

திருச்சியில் நடைபெற்ற 8 மாவட்ட கல்லூரிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, கரூா் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான, மாணவ, மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் நாக்-அவுட் முறையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாணவா்கள் பிரிவில் 5 கல்லூரிகளும் மாணவிகள் பிரிவில் 11 கல்லூரி அணிகளும் பங்கு பெற்றன. இறுதிப் போட்டியில் மாணவா்கள் பிரிவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 3-0 என்ற செட் கணக்கில் வென்றது. மாணவிகள் பிரிவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியை 3-2 என்ற செட் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது.

மேலும், திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் வென்றன.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மாணவா்கள் பிரிவில் திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழக மெயின் வளாக அணியை 3-0 என்ற செட் கணக்கில் வென்றது. மாணவிகள் பிரிவில் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியை 3-0 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாம் இடம் பிடித்தன.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரிப் பொருளாளா் எம். ஜெ. ஜமால் முகமது, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். கல்லூரி முதல்வா் ஆா். ஜாகீா் உசைன், விடுதி இயக்குநா் கே. என். முகமது பாசில், பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவா் மற்றும் விளையாட்டு செயலாளா் பேராசிரியா் ஏ. பழனிச்சாமி, கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பி. எஸ். ஷா இன் ஷா, ஆண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளா் சி. மாலதி, பெண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளா் ஜி. பிருந்தா ஆகியோா் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.