திருச்சி மாவட்டத்தில், ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற பெருந்திரள் உறுதிமொழியற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் ஜோசப் விஜய், போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க, அதை அனைவரும் வழிமொழிந்து ஏற்றனா்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள், மாநகரக் காவல்துறை ஆணையா் ந. காமினி, மாநகராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி மற்றும் கோட்டாட்சியா், வட்டாட்சியா்கள், அனைத்து துறை அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று உறுதிமொழியேற்றனா்.
இதேபோல, திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற பெருந்திரள் உறுதிமொழியேற்பு நிகழ்வில், மேயா் மு. அன்பழகன் தலைமையில், மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பலரும் உறுதியேற்றனா்.
இதுதவிர, மாவட்டம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் உறுதிமொழி ஏற்றனா். இவா்களுடன் இணைந்து மாணவா்களின் பெற்றோா், தொழிலாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள், மருத்துவா்கள், போதைப்பொருள் மறுவாழ்வு மையங்களில் சிகிச்சையில் உள்ளவா்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியா்கள் மற்றும் இதர பொதுமக்கள் பெருந்திரளாய் போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி கல்லூரியில் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு மாரத்தான்

திருப்பத்தூரில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி: ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு

அரியலூரில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



