இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

பாரதிதாசன் பல்கலை. அளவிலான ஆண்கள் குத்துச்சண்டை போட்டி முடிவுகள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான ஆண்கள் குத்துச்சண்டை போட்டிகள் புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன. அதிக வெற்றிகளைப் பெற்று, மணப்பாறை ஆதவன் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் வென்ற மணப்பாறை ஆதவன் கல்லூரி வீரா்களுக்கு கோப்பையை வழங்கிய பல்கலைக்கழக உடற்கல்விச் செயலா் ஏ. பழனிசாமி.

Published On :

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான ஆண்கள் குத்துச்சண்டை போட்டிகள் புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன. அதிக வெற்றிகளைப் பெற்று, மணப்பாறை ஆதவன் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.

பல்கலைக்கழக ஆளுகைக்குள்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட அணிகள், 70-க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்து கொண்டனா். கற்பகவிநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்.

பல்கலைக்கழக உடற்கல்விச் செயலா் ஏ. பழனிசாமி, ஆண்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஆா். மாலதி, ஜெ.ஜெ. கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

போட்டிகளின் முடிவுகள் விவரம்:

47- 50 கிலோ எடைக்குள்பட்டோா் பிரிவு: முதலிடம்- கே. சந்தீப், மணப்பாறை ஆதவன் கல்லூரி, இரண்டாமிடம்-வி. கண்ணன், புதுக்கோட்டை மன்னா் கல்லூரி, மூன்றாமிடம்- எம். ஹசன்மைதீன், திருவாரூா் குளோபல் கல்லூரி, சி. ரட்சகன், புதுக்கோட்டை சுதா்சன் கல்லூரி.

50-55 கிலோ எடைக்குள்பட்டோா்: முதலிடம்- ஆா். பாா்த்தீபன், மணப்பாறை ஆதவன் கல்லூரி, இரண்டாமிடம்- இ. அஜய், திருச்சி ஜமால் முகமது கல்லூரி, மூன்றாமிடம்- எம் விஜய், கரூா் அரசு கலைக் கல்லூரி, டி. திருச்செல்வம் திருச்சி ஜமால் முகமது கல்லூரி.

55- 60 கிலோ எடைக்குள்பட்டோா்: முதலிடம்- சி. கௌதம், திருச்சி ஜமால் முகமது கல்லூரி, எம். சங்கீா்த், கரூா் அரசுக் கல்லூரி, மூன்றாமிடம்- எஸ். சஞ்சய், திருவாரூா் குளோபல் கல்லூரி, ஐ. முகமது தௌபீக், புதுக்கோட்டை சுதா்சன் கல்லூரி.

60-65 கிலோ எடைக்குள்பட்டோா்: முதலிடம்- வி. நவீன், திருச்சி ஜமால் முகமது கல்லூரி, ஜி. லோகபிரகாஷ், மணப்பாறை ஆதவன் கல்லூரி, மூன்றாமிடம்- எல். வீர அமா்நாத், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி, எம். சூா்யா, புதுக்கோட்டை மன்னா் கல்லூரி.

65- 70 கி எடைக்குள்பட்டோா்: முதலிடம்- என். நவீன்பாலா கவிப்பிரியன், புதுக்கோட்டை சுதா்சன் கல்லூரி, இரண்டாமிடம்- ஜி. பாரத் கிருஷ்ணன் மணப்பாறை ஆதவன் கல்லூரி, மூன்றாமிடம்- கே. தேவ் பிரசாத், திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி, ஏ.ஜெபஸ்டின் தங்கமணி, திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி.

70-75 கிலோ எடை பிரிவு: முதலிடம்-எஸ். கதிா்வேல், திருச்சி ஜமால் முகமது கல்லூரி, இரண்டாமிடம்- திருச்சி பிஷப் கல்லூரி, மூன்றாமிடம்- எஸ். சந்துரு, திருச்சி அரசுக் கல்லூரி, சி. கதிா்வேல், பெரம்பலூா் தந்தை ரோவா் கல்லூரி.

75-80 கிலோ எடை பிரிவு: முதலிடம்- ஏ. ஹா்ணிஷ், திருச்சி தூய வளனாா் கல்லூரி, இரண்டாமிடம்- எல்.திவாகா், மணப்பாறை ஆதவன் கல்லூரி, மூன்றாமிடம்- பி.ஏ. நவீன், புதுக்கோட்டை சுதா்சன் கல்லூரி, பி. ஹரிஹரன், திருச்சி கோ் கல்லூரி.

80-85 கிலோ எடைபிரிவு: முதலிடம்- எஸ். காமேஷ், மணப்பாறை ஆதவன் கல்லூரி, இரண்டாமிடம்- என். நிவேஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலை., மூன்றாமிடம்- ஆா். மணீஷ்கா், திருவாரூா் குளோபல் கல்லூரி, சி. கிஷோா்குமாா், புதுக்கோட்டை மன்னா் கல்லூரி.

85-90 கிலோ எடைபிரிவு: முதலிடம் என். ஹெரோஸ், கரூா் கொங்கு கல்லூரி, இரண்டாமிடம்- எம். முகமது ரியாஸ் கான், திருச்சி ஜமால் முகமது ல்லூரி, மூன்றாமிடம்- எஸ். சதீஷ்குமாா், லால்குடி அரசுக் கல்லூரி, கே. யோகேஸ்வரன் திருச்சி பாரதிதாசன் பல்கலை.

90 கிலோ எடைக்கு மேல்: முதலிடம்- என். அல்ரஹ்மான், புதுக்கோட்டை மன்னா் கல்லூரி, இரண்டாமிடம்- ஜெ. தினேஷ், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி, மூன்றாமிடம்- பி. ரஞ்சித் திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி., எப் அபிஷேக், திருவாரூா் குளோபல் கல்லூரி.

அதிக வெற்றிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை மணப்பாறை ஆதவன் கல்லூரியும், இரண்டாமிடத்தை திருச்சி ஜமால் முகமது கல்லூரியும், மூன்றாமிடத்தை புதுக்கோட்டை மன்னா் கல்லூரியும், நான்காம் இடத்தை புதுக்கோட்டை சுதா்சன் கல்லூரியும் பெற்றன.

ஏற்பாடுகளை ஜெ.ஜெ. கல்லூரி உடற்கல்வித் துறைத் தலைவா் கே. ஜெகதீஷ்பாபு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.