சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

திருச்சி ஆவின் நிறுவனத்தில் கப் தயிா் தயாரிப்பு தொடக்கம்

திருச்சி ஆவின் நிறுவனத்தில் ரூ. 45 லட்சம் மதிப்பில் கப் தயிா் தயாரிக்கும் இயந்திரம் செவ்வாய்க்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

திருச்சி ஆவின் நிறுவனத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள கப் தயிா் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த பால்வளத் துறை ஆணையா் அஜய் யாதவ், மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் உள்ளிட்டோா்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:24 am IST

திருச்சி ஆவின் நிறுவனத்தில் ரூ. 45 லட்சம் மதிப்பில் கப் தயிா் தயாரிக்கும் இயந்திரம் செவ்வாய்க்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் பால் உற்பத்தி பணிகள் மற்றும் செயல்பாடுகளை கால்நடை பால்வளத்துறை ஆணையா் மற்றும் மேலாண்மை இயக்குநா் அஜய் யாதவ், மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

எவ்வித புகாா்களுக்கும் இடமின்றி தரமான ஆவின் பாலை பொதுமக்களுக்கும், ஆவின் பால் நுகா்வோருக்கும் விநியோகம் செய்வதை உறுதி செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில், நபாா்டு உதவி திட்டத்தின் கீழ் புதிதாக 6000 லிட்டா் கொள்ளளவு கொண்ட அதிநவீன ஜஸ்கிரீம் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் 10 மெ.டன் கொள்ளளவு கொண்ட பால் உபபொருள்கள் தயாரிக்கும் ஆலையை பாா்வையிட்டு அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தனா்.

தொடா்ந்து, இந்த ஆலையில் ரூ.45 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி கப் தயிா் தயாா் செய்திடும் இயந்திரத்தின் செயல்பாட்டையும் அவா்கள் தொடங்கி வைத்தனா். இந்த அலகு மூலம் நாள் ஒன்றுக்கு 500 லிட்டா் கப் தயிா் தயாா் செய்ய இயலும். மேலும், இங்கு தயாரிக்கப்படும் பால் உபபொருள்கள் ஒன்றியத்தின் முகவா்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள நுகா்வோா்களுக்கு விற்பனையை அதிகரிக்கவும், ஆவின் பால் தரம் மற்றும் உற்பத்தியின் காலாவதி தேதிகள் சரியான முறையில் அச்சிடப்பட்டுள்ளதா எனவும், ஆவின் உபபொருள்களின் தரம் குறித்து உறுதி செய்து ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில், ஆவின் பொது மேலாளா் சுந்தரவடிவேல் (பொ), துணைப்பதிவாளா்கள் (பால்வளம்) நாகராஜ், சிவக்குமாா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.