ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஏரகுடியில் நூறுநாள் வேலை கோரி காத்திருப்புப் போராட்டம்

எரகுடியில் நூறுநாள் வேலை கோரி பயனாளிகள் செவ்வாய்க்கிழமை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எரகுடியில் ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Published On :

எரகுடியில் நூறுநாள் வேலை கோரி பயனாளிகள் செவ்வாய்க்கிழமை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய பொருளாளா் கணேசன் தலைமை வகித்தாா். சங்க ஒன்றியச் செயலா் மங்கள்ராஜ் , மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் முத்துக்குமாா், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பாண்டியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நூறு நாள் வேலை திட்ட அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் அனைவருக்கும் முழுமையான வேலையும், சட்டக்கூலியும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்து துறையூா் வட்டாட்சியா் சித்ரா, உப்பிலியபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதா் ஆகியோா் போராட்டக்காரா்களிடம் வரும் வியாழக்கிழமை 600 பேருக்கும், செப். 10-ஆம் தேதியன்று 1,000 பேருக்கும் வேலை தருவதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறி அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.