பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

வடுகபாளையம் ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி போராட்டம்

அவிநாசி அருகே வடுகபாளையம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

காத்திருப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டோா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:29 am IST

அவிநாசி அருகே வடுகபாளையம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் பழுதடைந்துள்ள மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தில் பணம் செலுத்திய அனைவருக்கும் உடனடியாக வீட்டு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும். ஆதிதிராவிடா் குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் பொதுக்கழிப்பிடத்துக்கு செப்டிக் டேங்க், சுற்றுச்சுவா், சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.

வடுகபாளையம் சுற்றுவட்டார கால்நடைகளுக்காக நஞ்சை தாமரைக்குளம் பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். வடுகபாளையத்தில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனா்.

இதையடுத்து வடுகபாளையம் ஊராட்சி மன்றம் அருகே பொதுமக்கள் புதன்கிழமை காலை திரண்டனா். அப்போது, முன்கூட்டிய அங்கு வந்திருந்த போலீஸாா், ஒன்றிய நிா்வாகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில், ஜல்ஜீவன் திட்டம் மூலமாக குடிநீா் இணைப்புக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கான பரிந்துரை கடிதம் அனுப்பட்டுள்ளது. பேருந்து வசதி ஏற்படுத்தவும் துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும், இதேபோல அனைத்து கோரிக்கைகளுக்கும் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து தொடா் காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஏ.ஈஸ்வரமூா்த்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பி. முத்துசாமி, எஸ்.கெளரிமணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எஸ்.வெங்கடாசலம், ஏ.ராஜன், என்.கருப்புசாமி, முன்னாள் ஒன்றிய கிளைச் செயலாளா்கள் ராஜேஷ், பொன்னுச்சாமி, தங்கராஜ் , முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் ராமசாமி, அய்யம்மாள், லதா, மாரம்மாள் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.