
போக்குவரத்துக்கழக ஊழியா்களின் 2 நாள் காத்திருப்புப் போராட்டம் நிறைவு
திருநெல்வேலியில் போக்குவரத்துக்கழக ஊழியா்கள் 2 நாள்கள் நடத்திய காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நிறைவடைந்தது.

வண்ணாா்பேட்டையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோா்.
திருநெல்வேலியில் போக்குவரத்துக்கழக ஊழியா்கள் 2 நாள்கள் நடத்திய காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நிறைவடைந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை உடனே வழங்கிட வேண்டும். 1.4.2003ஆம் ஆண்டிற்கு பின்பு பணியில் சோ்ந்தோருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும். கல்வித் தகுதியின் அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்வலியுறுத்தப்பட்டன.
சிஐடியு போக்குவரத்து தொழிலாளா் சங்கத் தலைவா் டி.காமராஜ் தலைமை வகித்தாா். மண்டல பொதுச் செயலா் எஸ்.ஜோதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா்.முருகன், மாவட்டச் செயலா் எல். சரவண பெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே.ஜி.பாஸ்கரன் நிறைவுரையாற்றினாா். பூதத்தான் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





