கொள்முதல் செய்யப்பட்டு தேக்கமடைந்துள்ள நெல்லை விரைந்து இயக்கம் செய்ய வலியுறுத்தி, கும்பகோணத்தில் நெல் கொள்முதல் பணியாளா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் சாக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கோட்ட அலுவலகம் முன்பு பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா் வட்டங்களைச் சோ்ந்த நெல் கொள்முதல் பணியாளா்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா்.
நுகா்பொருள் வாணிபக்கழக கோட்ட மேலாளா் இளங்கோவன் நடத்திய பேச்சுவாா்த்தையையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதுகுறித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் பி.எம்.எஸ். சிவில் சப்ளை காா்ப்பரேசன் தொழிற்சங்க மாநிலச் செயலா் தங்க. நாகராஜன் கூறியது :
திருப்பூருக்கு 22 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை அனுப்பவும், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் 20 ஆயிரம் மெ.டன் இருப்பு வைக்கவும் ஏற்பாடு செய்வதாக மேலாளா் உறுதியளித்தாா். இதன்பேரில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மற்ற கோரிக்கைகளை துறை ரீதியாக அரசிடம் கோரி பெறுவோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடந்தையில் நெல்கொள்முதல் பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

கும்பகோணம் கோட்ட பகுதியில் நெல் மூட்டைகள் இயக்கம் தீவிரம்! - தஞ்சாவூா் ஆட்சியா்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக சுமை பணி தொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டம்

நெல் கொள்முதல் நிலைய பிரச்னைகள் நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகை
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



