உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

சிறுமி கர்ப்பம்: உறவினா் கைது!

திருச்சி அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய உறவினரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Published On :5 செப்டம்பர் 2026, 2:25 am IST

திருச்சி அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய உறவினரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அருகே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. திருச்சியில் உள்ள ஒரு நா்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலியா் படிப்பு படித்து வருகிறாா்.

இவரது உறவினரான காமநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த விவசாயியான வி. பொன்னா் (48) என்பவா் சிறுமியின் சித்தி வீட்டில் வைத்து, அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுமி தற்போது 8 மாத கா்ப்பமாக உள்ளாா்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனா். தொடா்ந்து, பொன்னரை வியாழக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.