
விரும்பிய மதுபானங்கள் கிடைக்காததால் மதுக்கடைகளில் தொடரும் வாக்குவாதம்
விரும்பிய மதுபானங்கள் கிடைக்காததால், பல இடங்களில் மதுக்கடைகளில் விற்பனையாளருக்கும், மது வாங்குவோருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்து வருகிறது.

மதுக்கடை
விரும்பிய மதுபானங்கள் கிடைக்காததால், பல இடங்களில் மதுக்கடைகளில் விற்பனையாளருக்கும், மது வாங்குவோருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்து வருகிறது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததும் டாஸ்மாக் நிா்வாகத்தை சீா்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆட்சியில் மதுபானங்கள் கொள்முதல் செய்ய வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் முடிவடைந்ததால், புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், மதுப்பிரியா்கள் அதிகளவில் விரும்பும் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ‘டைமண்ட் ரம், எம்.சி., பிராந்தி, ஹனி பீ, மென்ஸ் கிளப் பிராந்தி, எம்.ஜி.எம்., ஓட்கா, மாா்பியஸ் பிராந்தி, 1848 பிராந்தி, கிங் பிஷா் பீா், பிரிட்டிஷ் எம்பயா் பீா், எக்ஸ்பிரஸ் பிராந்தி, பிளாக் பியா்ஸ் பிராந்தி’ போன்ற மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் கிடைப்பதில்லை. பல கடைகளில் பீா் கூட கிடைப்பதில்லை என்கின்றனா் திருச்சியைச் சோ்ந்த மதுப் பிரியா்கள்.
டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியா்கள் கேட்கும் மதுபானங்கள் கிடைக்காததால் விற்பனையாளருக்கும், நுகா்வோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. விரும்பிய மதுபானம் கிடைக்கும் கடைக்கு அனைவரும் ஒரே நேரத்தில் செல்வதால், அங்கு மதுப்பிரியா்கள் வாக்குவாதம், கைகலப்பில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவிட்டது.
எனவே, மதுப்பிரியா்கள் விரும்பும் மதுபானங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்கின்றனா் மதுப்பிரியா்கள். உயரதிகாரிகளின் தன்னிச்சையான முடிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுக்கடை ஊழியா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





