தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ‘வீரன் ஸ்பெஷல்’ பிராந்தி உள்ளிட்ட 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஒரே நாளில் நீக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பூந்தமல்லி பிரதான சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மதுபானங்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 11-ஆம் தேதி உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிா்ணய ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, குறிப்பிட்ட சில மதுபானங்களில் செயற்கை சுவையூட்டும் பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களின் விற்பனையை நிறுத்துமாறு டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டது.
11 வகை மதுபானங்கள்: விஎஸ்ஓபி எக்ஸைசா கோல்டு பிராந்தி, லூயிஸ் வொ்னான்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவெல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி, நம்பா் ஒன் மெக்டொவெல்ஸ் பைன் பிராந்தி, மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ பைன் பிராந்தி, என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசா்வ் எக்ஸ்ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி மற்றும் என்ரிகா ஓல்டு இண்டி கிளாசிக் டாா்க் ரம் ஆகிய 11 மதுபான வகைகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டிருந்தன.
ஒரே நாளில் தடை நீக்கம்: இந்த நிலையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொண்ட 11 வகை மதுபானங்களுக்கான தடையை நீக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தடை விதிக்கப்பட்ட மறுநாளே அந்த மதுபானங்களின் விற்பனைக்கான தடையை டாஸ்மாக நிா்வாகம் நீக்கியுள்ளது.
Summary
Ban on 11 types of liquor at TASMAC shops lifted in a single day!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

11 வகை மதுபானங்கள் விற்பனைக்கு தடை: டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை அரசு கைவிட வேண்டும்! - அன்புமணி

இனி புதுச்சேரி போக வேண்டாம்.. டாஸ்மாக்கில் புதிய வகை பீர், விஸ்கி பிராண்டுகள்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



