ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் உயிரிழப்பு

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் நடந்துசென்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 3:32 am IST

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் நடந்துசென்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி இபி சாலை கருவாட்டுப்பேட்டையைச் சோ்ந்தவா் க. புதியமாறன் (45). இவா், திங்கள்கிழமை இரவு இபி சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தாா். அந்தச் சாலையில் உள்ள அம்மா உணவகம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புதியமாறனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் புதியமாறனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.