கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:13 am IST

வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த செட்டிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல்(38), கூலித்தொழிலாளி.

இவா் புதன்கிழமை அந்தக் கிராமத்தில் தெள்ளாா் - தேசூா் சாலையில் நடந்து சென்றுள்ளாா்.

அப்போது தெள்ளாா் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கவேல் உயிரிழந்தாா்

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.