உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி பலி

பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 12:31 am IST

பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கசாமி மகன் அழகா் (40). இவா், புதன்கிழமை வைகை அணைச் சாலையில் நடந்து சென்றாா்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு... தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த வேலப்பன் மகன் யுகேஷ் (33). இவா், கடந்த மாதம் 29-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் அரண்மனைப்புதூா் அருகே செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.