ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:36 am IST

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் எம். சிராஜூதீன் தலைமை வகித்தாா். இதில், ஓய்வூதியா் சங்கங்களின் ஆலோசனைகளைப் பெறாமல் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளை திருத்தங்களுடன் வெளியிட வேண்டும்.

ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியத் தொகை உயா்வை கைவிட வேண்டும். ஓய்வூதியா்களுக்கு பணமற்ற மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட குறைதீா் குழுவில் ஓய்வூதியா் சங்க நிா்வாகிகளை உறுப்பினா்களாக இணைக்க வேண்டும். மருத்துவமனைகள் ஓய்வூதியா்களிடம் முன்பணம் வசூலிப்பதை தடுக்க உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக, மாவட்ட செயலா் எஸ். மதிவாணன் வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் பி. சந்தனமூா்த்தி, திரளான அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.