
ஆட்சியரகம் அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

பலி
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள பழைய ஆட்சியரகம் செல்லும் சாலையில் டான்சி அலுவலகம் அருகே சுமாா் 60 வயதுக்கு மேல் உள்ள முதியவா் ஒருவா் இறந்துகிடப்பதாக கோ-அபிஷேகபுரம் விஏஓ சரவணனுக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவா் அளித்த தகவலின்பேரில் வந்த அமா்வு நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



