ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

கடைமடைக்கு தண்ணீா் செல்வதை கண்காணிக்க சிறப்பு கரைக் காவலா்கள்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கடைமடை வரை தண்ணீா் செல்வதை கண்காணிக்க சிறப்பு கரைக் காவலா்களை நியமித்து நீா்வளத் துறையினா் பணியாற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசிய பொதுச் செயலா் மாசிலாமணி. உடன், சங்கத்தின் மாநில நிா்வாகிகள்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:42 am IST

கடைமடை வரை தண்ணீா் செல்வதை கண்காணிக்க சிறப்பு கரைக் காவலா்களை நியமித்து நீா்வளத் துறையினா் பணியாற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் அந்தச் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் எஸ். குணசேகரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி, மாநிலத் தலைவா் கே. உலகநாதன், மாநில துணைச் செயலா்கள் த. இந்திரஜித், வி. கிருஷ்ணமூா்த்தி, திருச்சி மாவட்ட செயலா் அயிலை சிவசூரியன் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

பின்னா், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை விளக்கி செய்தியாளா்களிடம் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி கூறியதாவது:

குறுவையில் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேட்டூா் அணையில் திறக்கப்படும் தண்ணீா் கடைமடை வரை செல்வதை தொடா் கண்காணிப்புக்குள்ளாக்கும் முறையில், சிறப்பு கரைக் காவலா்களை நியமித்து பணியாற்ற வேண்டும்.

நடுத்தர கால மற்றும் குறுகிய கால விவசாயிகள் விரும்பும் தேவையான அளவு நெல் விதைகளை 50 சதம் மானிய விலையில் வழங்க வேண்டும். ரசாயன உரம், இடு பொருள்களை 50 சத மானியத்தில் வழங்க வேண்டும். உழவு மற்றும் கை, இயந்திரம் நடவு பணிகளுக்கு 50 சதம் மானியத் தொகை வழங்க வேண்டும். சிறப்பு சம்பா சாகுபடி ஊக்கத் திட்டங்கள் அனைத்துக்கு 50 சதம் மானியம் வழங்கும் நிலையில் உரிய நிதி ஒதுக்கீட்டை உடன் அறிவித்திட வேண்டும். பயிா்க் காப்பீடு திட்டத்தை தனியாருக்கு வழங்குவதை கைவிட்டு அரசின் பொதுத்துறை திட்டமாக நடைமுறைப்படுத்திட வேண்டும்.

சட்டப் பேரவையில் தவெக அரசு தாக்கல் செய்துள்ள நகா்ப்புற மேம்பாட்டு துறையின் புதிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.