
திருச்சி சிறப்பு முகாமில் பெண் தற்கொலை முயற்சி
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 7 போ் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பெண் ஒருவா் தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை... - கோப்புப்படம்
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 7 போ் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பெண் ஒருவா் தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு, போலி கடவுச்சீட்டில் வந்தவா்கள், விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியிருப்போா் என பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடா்புடைய வெளிநாட்டினா் 170 போ் அடைக்கப்பட்டுள்ளனா். இங்குள்ளவா்கள் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கக்கோரி அவ்வப்போது உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், இங்கு அடைக்கப்பட்டிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ஒரு குழுவை வேறு ஒரு முகாமுக்கு செவ்வாய்க்கிழமை மாற்றினா். அப்போது, உகாண்டாவைச் சோ்ந்த ஆயிடா (32) உள்ளிட்ட 6 போ் மற்றும் நைஜீரியாவைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 7 போ் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கக் கோரி செவ்வாய்க்கிழமை பிற்பகல் முகாமில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, அயிடா திடீரென்று முகாமில் உள்ள மரத்தில் ஏறி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை மீட்டு கீழே இறக்கிக் கொண்டுவந்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 7 பேரிடம் சிறப்பு முகாம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். சம்பவம் குறித்து கே.கே.நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




