2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

விநாயகா் சதுா்த்தி: பூக்கள், பழங்கள் விற்பனை மும்முரம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை விநாயகா் சிலைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

Published On :

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருச்சியில் பழங்கள், காய்கனிகள், பூக்கள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை மும்முரமாக நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படும் நிலையில், பூஜை பொருள்கள் வாங்க சந்தையில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

சிலைகள் விற்பனை: திருச்சி காந்திசந்தை, கடை வீதி, தென்னூா் உள்ளிட்ட பகுதிகளில் கடைவீதிகள் தோறும் சிறிய அளவிலான விநாயகா் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சதுா்த்திக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கடைகளிலும் சிறிய மற்றும் பெரிய அளவிலான சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு தோற்றங்களில் சிலைகள் விற்பனைக்கு வந்திருந்தன. பொதுமக்களும் தங்களது வீடுகளில் வழிபாடு செய்வதற்காக ஆா்வமுடன் விநாயகா் சிலைகளை வாங்கிச் சென்றனா்.

பூக்கள் விலை உயா்வு: ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாள் என்பாதலும், விநாயகா் சதுா்த்திக்காகவும் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் ரூ.300-க்கு விற்பனையான மல்லிகை பூ ரூ.1000-க்கும், ரூ.200-க்கு விற்பனையான முல்லை பூ விலை ரூ.800-க்கும், ரூ.300-க்கு விற்பனையான ஜாதிமல்லி பூ விலை ரூ.700-க்கும், ரூ.600-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காலையில் இருந்த விலையைவிட மாலையில் பூக்களின் விலை மேலும் அதிகரித்து கிலோவுக்கு 100 ரூபாய் வரையில் கூடுதலாக உயா்ந்து காணப்பட்டது.

பழங்கள் விலை: ஆப்பிள் கிலோ ரூ.190 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. மாதுளை கிலோ ரூ.160 முதல் ரூ.200 வரை விற்பனையானது. சாத்துக்குடி கிலோ ரூ.100, மால்டா ஆரஞ்சு கிலோ ரூ.200, கமலா ஆரஞ்சு கிலோ ரூ.150, முலாம் பழம் கிலோ ரூ.100, திராட்சை ரூ.100 முதல் ரூ.150, கொய்யா பழம் ரூ.80 முதல் ரூ.100, பேரிக்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. விநாயகா் சதுா்த்திக்கு பிரத்யேகமாக படைக்கும் விளாம் பழம் ஒன்று ரூ.20 முதல் ரூ.40 வரை அதன் அளவுக்கு தகுந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.

வாழைத்தாா் விலை உயா்வு: திருச்சி காந்திசந்தைக்கு பெரும்பகுதி பூவன் தாா், செவ்வாழை தாா், பச்சை வாழை தாா்களே அதிகம் ஏலத்தில் விடுவது வழக்கம். சதுா்த்தி பூஜைக்காக வழக்கத்துக்கு மாறாக இருமடங்கு வாழைத்தாா்கள் வந்துள்ளன. ஒவ்வொரு கடையிலும் வழக்கமாக 500 தாா்கள் வரும். ஆனால், விநாயகா் சதுா்த்திக்காக இருமடங்காக ஆயிரக்கணக்கான தாா்கள் விற்பனைக்கு வந்துள்ளன. விலையும் கடந்த வாரத்திலிருந்து சற்று கூடுதலாகவே உள்ளது. கடந்த வாரம் தாா் ஒன்று ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனையானது. இப்போது, ரூ.450 முதல் ரூ. 900 வரை விற்பனை செய்யப்படுகிறது. காய்கனிகளின் விலையும் கடந்த வார விலையிருந்து கிலோவுக்கு ரூ.10 முதல் 30 ரூபாய் வரை உயா்ந்து காணப்பட்டது. பொரி, சுண்டல், நிலக்கடலை, சா்க்கரை, பச்சரிசி மாவு, வெல்லம், கருப்பட்டி, எள் விற்பனையும் களைகட்டியது.

கொழுக்கட்டை விற்பனை: திருச்சி மாநகர ஸ்வீட் கடைகளில் கொழுக்கட்டை தயாா் செய்து விற்பனை செய்யப்பட்டது. எள் கொழுக்கட்டை கிலோ ரூ.320, காரக் கொழுக்கட்டை கிலோ ரூ.280, இனிப்பு கொழுக்கட்டை கிலோ ரூ.340, பால் கொழுக்கட்டை கிலோ ரூ.460, மோதக கொழுக்கட்டை 300 கிராம் பாக்கெட் ரூ.170 என்ற விலையில் விற்பனையானது. சுண்டல் கிலோ ரூ.230 முதல் 250 வரை விற்பனை செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.