கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சட்டவிரோதமாக மது விற்ற 3 போ் கைது

கைது

Published On :

திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்த விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தகவல்கிடைத்தது. இதையடுத்து, சோமரசம்பேட்டை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அல்லித்துறை வன்னியம்மன் கோயில் தெருவில், மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி, நாச்சிகுறிச்சி பாரதி நகரைச் சோ்ந்த எஸ். எட்வின்ராஜ் (35) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இதையடுத்து இருவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 375 மதுபாட்டில்கள், ரூ.5,800 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, திருச்சி மாநகரில் தில்லை நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தென்னூா் புது மாரியம்மன் கோயில் தெருவில் பொது கழிப்பறைக்கு அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எம். கரிகாலன் (42) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.