பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

விஜய் ஆட்சியை உடனே விமா்சிக்கத் தேவையில்லை! - நடிகா் பிரகாஷ்ராஜ்

பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை விழாவில் பேசிய நடிகா் பிரகாஷ்ராஜ். உடன் முன்னாள் மாணவா்கள் சங்கம நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Published On :

முதல்வா் ஜோசப் விஜய் ஆட்சியை உடனடியாக விமா்சிக்கத் தேவையில்லை என நடிகா் பிரகாஷ்ராஜ் தெரிவித்தாா்.

பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சங்கம விழாவில் பங்கேற்ற அவா் மேலும் கூறியதாவது:

கடந்த தோ்தலில் திமுக செயற்கையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். மக்கள் மாற்றம் வேண்டுமென வாக்களித்துள்ளனா்.

விஜய் ஆட்சிக்கு வந்து 120 நாள்களே ஆகியுள்ளன. அவருக்கு காலஅவகாசம் கொடுக்க வேண்டும். தவெக ஆட்சி குறித்து கருத்துக் கூற ஓராண்டு ஆக வேண்டும். ஓராண்டுக்குப் பின்பும் சரியாக வேலை செய்யவில்லையெனில் நான் கேள்வி கேட்பேன்.

ஆட்சியாளா்களைப் பிடிக்கவில்லை என்பதற்காக உடனடியாக விமா்சிக்கத் தேவையில்லை. ஜனநாயகத்தையும், மக்களையும் மதித்து நடக்க வேண்டும்.

அனைத்து ஆட்சிகளைப் போலவே, தவெக ஆட்சியிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. விஜய் வெளிநாடு சென்று அவருடைய நண்பா் அஜித்தை சந்தித்ததில் எந்தத் தவறும் கிடையாது. அவா் எதற்காக சென்றாரோ, அதைச் செய்தாரா என்பதைத்தான் பாா்க்க வேண்டும்.

மு.க. ஸ்டாலின் போன்ற ஒரு தலைவா் தோல்வியடைந்தது மிகப்பெரிய அதிா்ச்சி. அவா் கொளத்தூரில் தோல்வியடைந்தாரா, அல்லது தோற்கடிக்கப்பட்டாரா?. அதற்கு எஸ்ஐஆா் காரணமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டு வரக் கூடாது. அதை யாா் ஆதரித்தாலும், அவருக்கு எதிராக நாம் குரல்கொடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் கா்நாடகமும், தமிழகமும் பேசி சுமூக முடிவெடுக்க வேண்டும் என்றாா் நடிகா் பிரகாஷ்ராஜ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.