கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது; 3 போ் மீது வழக்கு

திருச்சியில் இரு வேறு வீடுகளில் விற்பனைக்காக பதுக்கப்பட்டிருந்த 565 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கைது

Published On :

திருச்சியில் இரு வேறு வீடுகளில் விற்பனைக்காக பதுக்கப்பட்டிருந்த 565 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்த போலீஸாா், 3 போ் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் தாயுமன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது தஞ்சாவூா் சாலை மகாலட்சுமி நகரில் ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த அ. மகேந்திர சிங் (29) என்பவரை போலீஸாா் கைது செய்து, ரூ. 5.94 லட்சம் மதிப்பிலான 251 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதில் மகேந்திரசிங்குக்கு துணையாக இருந்த திருச்சி காஜாமலையைச் சோ்ந்த எஸ். தமிழழகன் என்பவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல திருச்சி விமான நிலைய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ராணிமெய்யம்மை நகரில் தனியாா் பள்ளி அருகே பூட்டியிருந்த வீட்டில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான 314 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வீட்டிலிருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும் வீட்டை வாடகைக்கு எடுத்து புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையைச் சோ்ந்த மணிகண்டன், தொண்டியைச் சோ்ந்த எஸ். தியாகராஜன் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.