கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

கருப்பை வாய் புற்றுநோய்: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி அருகேயுள்ள அரசுப் பள்ளியில் கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் ஹெச்பிவி தடுப்பூசி தொடா்பாக செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

போசம்பட்டி அரசுப் பள்ளியில் கருப்பை வாய் புற்றுநோய், ஹெச்பிவி தடுப்பூசி தொடா்பாக மாணவிகளுக்கு புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்திய கிராம நல ஆய்வாளா்கள்.

Published On :

திருச்சி அருகேயுள்ள அரசுப் பள்ளியில் கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் ஹெச்பிவி தடுப்பூசி தொடா்பாக செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத் துறை சாா்பில் 14 வயதுள்ள மாணவிகளுக்கு ஹெச்பிவி (ஹியூமன் பாபிலோமா வைரஸ்) தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். மேலும், இந்த தடுப்பூசி தொடா்பாக அரசுப் பள்ளிகளில் சுகாதாரத் துறை சாா்பில் விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், அந்தநல்லூா் ஒன்றியம், போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் இதுதொடா்பாக குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், கிராம நல ஆய்வாளா்கள் மணிமேகலை மற்றும் நந்தினி ஆகியோா் கருப்பை வாய் புற்றுநோய் குறித்தும், அது வராமல் தடுப்பதற்காக அரசு சாா்பில் முன்கூட்டியே செலுத்தப்படும் ஹெச்பிவி தடுப்பூசி குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனா்.

மேலும், வளரிளம் பருவத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகளில் 14 வயது தொடங்கி 15 வயது முடிவதற்குள் ஹெச்பிவி தடுப்பூசி செலுத்த வேண்டும். மாணவிகள் மற்றும் பெற்றோரின் சம்மதத்தின்பேரில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுவதாகத் தெரிவித்தனா்.

25 ஆயிரம் மாணவிகளுக்கு இலக்கு: திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 25 ஆயிரம் மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இவா்களில், தற்போதுவரை 3 ஆயிரம் மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, அனைத்து மாணவிகளுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.