சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி
கா்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதற்காக, 14 முதல் 15 வயதுக்குட்பட்ட சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
கா்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதற்காக, 14 முதல் 15 வயதுக்குட்பட்ட சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிட்ட செய்தி குறிப்பு:
சிறுமியருக்கு எதிா்காலத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கா்ப்பப்பை வாய் புற்றுநோயினை தடுப்பதற்காக, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக 14 வயது தொடங்கி 15 வயது பூா்த்தியடைவதற்கு முன்னதாக மாணவிகளுக்கு இலவசமாக ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 14 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் பணியானது, பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலுடன் நடைபெற்று வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 71 பள்ளிகளில் பயிலும் 3,701 மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி திரு.வி.க. நகா் மண்டலம், வாா்டு 71-க்கு உள்பட்ட பாரதி சாலையில் உள்ள நகா்ப்புற நலவாழ்வு மையம், எம்.எச்.சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் 350 மாணவியருக்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை இணை ஆணையா் (கல்வி) க.கற்பகம், பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நிகழ்வில் மாநகர மருத்துவ அலுவலா், கல்வி அலுவலா்கள், கூடுதல் மாநகர மருத்துவ அலுவலா், மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

